அவசர சட்டம் தயார்.. சென்னைக்கு விரைந்தார் ஆளுநர்..!

0
86

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்தும் அறப் போராட்டம் காட்டுத் தீ போல் பரவுகின்றது. தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை பார்த்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். உள்துறை அமைச்சகம் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை காலை அவசரச்சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அவசரச்சட்டம் வருவதால் ஆளுநர் வித்தியாசாகர ராவ் மும்பையில் இருந்து அவசரமாக சென்னை விரைந்து வருகிறார். இதன் பின்னர் நாளை மாணவர்களின் போராட்டம் குறித்து கேட்டறிவார் என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY