ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்.. மாணவர்கள் ஏற்க மறுப்பு.. போராட்டம் தொடரும் என அறிவிப்பு

0
86

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் நடந்து வருகிறது. தன்னெழுச்சியாக நடைபெறும் இந்த போராட்த்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. இதன் பலனாக தற்போது ஆளுநர் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்து உள்ளார்.

இதனை  தொடர்ந்து அலங்காநல்லூர் பாலமேடு, அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கிறது. இதற்காக வாடிவாசலை தூய்மை படுத்தும் பணி நடக்கிறது.

இதனை போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் அவசர சட்டத்தை ஏற்க மறுத்து உள்ளனர். ஏனென்றால் இந்த அவசர சட்டம் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் தடை பெற வாய்ப்பு உள்ளது. இதனால் எங்களுக்கு நிரந்தர தீர்வு தேவை என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY