இப்போ உங்கள யார் கூப்பிட்டா? “- நடிகர் சங்கம் மேல் போராட்டகாரர்கள் கொந்தளிப்பு

0
91

“காவிரி பிரச்சனையில் நடிகர்கள் போராடமுடியாது என்று சொன்னீர்களே? இப்போது எதற்கு நாளை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறீர்கள்? அரசு பார்த்துக்கொள்ளும் என்று எப்படி காவேரி பிரச்சனையில் இருந்தீர்களோ, அப்படி இல்லாமல், மீடியா வெளிச்சத்தை உங்கள் மீது பாய்த்துக்கொள்ள எதற்கு தேவை இல்லாமல் வருகிறீர்கள்?’ என்று நடிகர் சங்கம் நாளை ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு தந்து நடத்தும் மௌன போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் கொந்தளித்து உள்ளனர்.

எங்கள் போராட்டத்தை திசை திருப்பும் இந்த முயற்சியில், மீடியாவே கண்டுகொள்ளாதே, தயவுசெய்து மாணவர்கள் பொதுமக்கள் யாரும் நடிகர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டாம். அவர்களைப் பற்றிய செய்திகளையும் இங்கு பதிவிட வேண்டாம்.இப்போராட்டத்திற்கான விதை நாம் போட்டது.அறுவடை செய்ய வேண்டியவர்கள் நாம்தானே தவிர நடிகர்களல்ல என்றும் சமூக வலை தளம் முழுதும் ஏகப்பட்ட கண்டனங்கள்.

வெட்கமாக இல்லையா…நடிகர் சங்கமே.வரது தான் வரிங்க…அந்த த்ரிஷாக்காவ கூப்பிட்டுட்டு வாங்கப்பா,நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எப்படி கூட்டம் அள்ளுச்சோ, அது போல கூட்டம் வரும் என்றும் கமெண்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

LEAVE A REPLY