அடுத்த இலக்கு டாஸ்மாக்கை மூடுவதுதான்.. ராகவா லாரன்ஸ் பேச்சு.. மாணவர்கள் மகிழ்ச்சி

0
120

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அதுபோல சென்னை மெரினா பீச்சிலும் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாக திரண்டு போராடி வருகின்றனர்.

இவர்களோடு நடிகர் ராகவா லாரன்சுடன் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் போது நேற்று அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடித்த பின்னர் ராகவா லாரன்ஸ் போராட்ட களத்தில் மீண்டும் திரும்பினார். அப்போது போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்துவம் விதமாக பேசினார். அப்போது அவர் பேசும்போது, கூட்டத்தினரிடம் அடுத்து தமிழகத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து கேட்டார். அதற்கு ஊழல், கல்வி கட்டணம் போன்ற பல்வேறு பிரச்னை குறித்து கூறினார்.

மேலும் பெரும்பாலானோர் டாஸ்மாக் எனவும் கூறினார். இதனை கேட்ட லாரன்ஸ் டாஸ்மாக்கை மூட போராடுவோம். அதற்கு முன் இதனை தொடருவோம் என போராட்டத்தை தொடர்ந்தார்.

LEAVE A REPLY