அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்பு

0
89

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக  இன்று பதவியேற்றார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதியாக  மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.

டிரம்ப்  தனது ஆரம்ப  உரையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா ஆகியோர்  ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து  பாராட்டுத் தெரிவித்தார். இந்த ஜனவரி 20ம் திகதி  இந்த நாட்டின்  மக்கள் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை எதிர்நோக்கியுள்ள பணி மிகவும் சவால் நிறைந்தது  எனவும் எனினும்  இந்த வேலையை செய்து முடிக்கப்போவதாகவும் உறுதியளித்த அவர் இன்றிலிருந்து ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவுக்கு முதலில் லாபம் அளிக்கும் வகையிலேயே எடுக்கப்படும்  எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன்  எனவும்  அமெரிக்கர்களின்  பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்காவின் எல்லைகள் பலப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த அவர் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY