மாணவர்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு வருகிறது.

மதுரையில் இருந்து புதிய தலைமுறை செய்தியாளர் தியாகச் செம்மல் மற்றும் திருப்பூர் செய்தியாளர் சுதிஷ் ஆகியோர் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருவதாக நடுநிலையோடு தான் செய்தி தருகின்றனர்.

ஆனால் சென்னை தொலைக்காட்சி அரங்கில் உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர் தொடர்ந்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக தொகுத்து வருகிறார்.

” தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் இனி மேல் போராட்டம் தொடர தேவையில்லை தானே” என்று கேள்வி கேட்பது தான் கொடுமையிலும் கொடுமை.

தற்போது போராட்டக்காரர்களின் குரலை பதிவு செய்யாமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேட்டியை ஒளிபரப்பி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு ஆதரவான ஒருவரையும் அரங்கில் அமர வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.  தமிழர்கள் தக்க முறையில் புதியதலைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுநிலையாக செய்தி வெளியிடச் செய்யவும்.

LEAVE A REPLY