ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு அம்பானி சர்ப்ரைஸ் அறிவிப்பு!!

0
106

டிசம்பர் மாத இறுதியோடு முடிவடையும் ஜியோ வெல்கம் ஆஃபரின் இரண்டாம் பகுதி நீடித்து தற்போது மார்ச் வரை செல்லுபடி ஆகும் என அம்பானி அறிவித்துள்ளார்.

எந்த ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் விளம்பர வாய்ப்பும் 90 நாட்கள் வரம்பு கொண்டிருக்க வேண்டும் என்பது டிராய் கட்டுப்பாடு.
ஆனால், அதயும் தாண்டி மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோ இலவச சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை மார்ச் 2017 வரை வரும். இது வரை 5 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள நிலையில் மேலும் அம்பானியின் இலக்கான 100 கோடி வாடிக்கையாளர்களை பெற இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் ஜியோ பயனர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பிற தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடோபோன், ஐடியா தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

LEAVE A REPLY