இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாய் தமிழர்கள் : நடிகர் மம்மூட்டி நெகிழ்ச்சி

0
108

கடந்த 5 வது நாளாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இளைஞர்களின் இந்த எழுச்சிமிகு அறப்போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், என உலகெங்கிலும் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், தமிழில் ட்வீட் செய்ததற்கு அதிகளவில் பாராட்டுகள் குவிந்தன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு தலைவரின் துணையும் இன்றி, ஆண்,பெண் ஜாதிமத பாகுபாடின்றி, லட்சக்கணக்கான பேர் துளியும் வன்முறை இல்லாமல்,தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த போராட்டம் இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள் தோழர்களே..!”என சுத்தத் தமிழில் பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டி ஏற்கனவே முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழகர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY